விசுவாசம் படத்தில் அஜித் பாடப்போகிறாராஅஜித் ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமாவில் அதிக அளவு ரசிகர்களை, கவர்ந்தவர் அஜித். இவர் பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார். அஜித் மிகவும் எதார்த்தமானவர் என்றும் இயல்பாக பழகுவார் என்றும் அவருடன் நடிக்கும் பல பிரபலங்கள் சொல்லி கேட்டது உண்டு. இவர் கடைசியாக நடித்த படம் விவேகம். இப்படத்தை இயக்கியவர் இயக்குனர் சிவா. இவர்களின் கூட்டணியில் உருவான வீரம் மற்றும் வேதாளம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்ற படங்கள். தற்போது இவர்களது கூட்டணியில் விசுவாசம் படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு நயன்தாரா தான் கதாநாயகி என்று உறுதியாகிவிட்டது.

மேலும், சாரதா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு டி. இமான் தான் இசையமைக்கவுள்ளாராம். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் 23 ஆம் தேதி தொடங்க இருப்பதாக முன்பே சில தகவல்கள் வெளியானது. ஆனால், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நேற்று அதிரடியாக படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் உள்பட சினிமா சம்பந்தப்பட்ட எந்த பணியும் நடக்காது என்று அறிவித்தார்.

 

 

அதனால் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பை தள்ளிவைத்துள்ளார்கள் என்று முன்பே செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது பேட்டியளித்துள்ள டி. இமான், படத்திற்காக 2 பாடல்கள் தயார் செய்து வைத்துள்ளதாக கூறியுள்ளார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் அந்த 2 பாடல் காட்சிகளை எடுக்க உள்ளதாக டி. இமான் கூறியுள்ளார். அதோடு அஜித் ஒப்புக்கொண்டால் கண்டிப்பாக விசுவாசம் படத்தில் அவரை பாட வைக்க நான் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.