ப்ரியா வாரியருக்கு ஏற்கனவே ஆள் இருக்கு பாஸ் வைரலான புகைப்படம்

சென்னை: நடிகை ப்ரியா வாரியருக்கு ஏற்கனவே காதலர் உள்ளார்.

ஒரு அடார் லவ் படம் மூலம் நடிகையாகியுள்ளார் ப்ரியா பிரகாஷ் வாரியர். அந்த படத்தின் பாடல் வீடியோவில் அவர் கண்ணால் பேசியது பிடித்துப் போக இளசுகள் எல்லாம் அவர் ரசிகர்கள் ஆகிவிட்டார்கள்.

இந்நிலையில் ப்ரியாவுக்கு ஆள் இருப்பது தெரிய வந்துள்ளது.

தனக்கு காதலர் இருக்கும் விஷயத்தை ப்ரியாவே சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இதை பார்த்த நம்ம ஊர் பசங்களோ போ போ அவளுக்கு ஏற்கனவே ஆள் இருக்கு என்று மீம்ஸ் போடுகிறார்கள்.

அது என்னங்கடா கேரளாவில் இருந்து எந்த பெண் வீடியோ வந்தாலும் இந்த தமிழ் பசங்க அமோக வரவேற்பு கொடுத்து அவளை ஹிட்டாகிவிடுகிறீர்கள் என்ற கடுப்பு தமிழக பெண்களுக்கு இல்லாமலா இருக்கும்.

கேரளாவில் பள்ளிக்கூடத்தில் மாணவனும், மாணவியும் கண்ணால் பேசுகிறார்களாம். ஆனால் தமிழகத்திலேயோ நேர் எதிராம்.

உடன் படிக்கும் மாணவி ப்ரியா பிரகாஷ் வாரியர் போன்று இருப்பார் என்று எதிர்பார்த்தால் உல்டாவாக இருக்காம்.

ஜிமிக்கி கம்மல் ஷெரில், ப்ரியா வாரியரை பார்த்த பிறகு தமிழகத்தில் உள்ள பிளே பாய்ஸ் என்டே மாநிலம் கேரளா என்று கிளம்பிட்டாங்களாம்.

சும்மா விட்டால் இரண்டு நாட்கள் தான் டிரெண்டிங்கில் இருக்கும் தேவையில்லாமல் பில்ட் அப் கொடுத்து ஜிமிக்கி கம்மல் மாதிரி ஆக்கிடாதீங்கய்யா.