விவாகரத்துக்கு பின் காதலருடன் நெருக்கமாக டூயட் பாடிய டிடி

சமீப காலமாக இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனில் தயாரிப்பு நிறுவனமான 'ஒன்ராகா ஒரிஜினல்ஸ்' வளர்த்து வரும் இயக்குனர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து சிறந்த படைப்புகளை தேர்வு செய்து, அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறது. 

அதன் அடிப்படையில் கடந்த ஓரிரு மாதத்திற்கு முன் வெளியான 'லட்சுமி' குறும்படம் சில சர்ச்சைகளை சந்தித்தாலும் மிகவும் பிரபலமானது. அதைத்தொடர்ந்து குடியரசு தினத்தன்று வெளியான 'மா' குறும்படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

காதலர் தின ஸ்பெஷல்:

தற்போது காதலர் தின ஸ்பெஷல்லாக, இயக்குனர் கெளதம் மேனன் தயாரிப்பில் தொகுப்பாளினி டிடி மற்றும் டோவினோ தாமஸ் நடித்து 'உலவிரவு' என்கிற காதல் பாடல் வெளியாகியுள்ளது.

உலவிரவு:
 
உலவிரவு என்பது நீண்ட நாட்களாக உறவில் இருக்கும் இருவர் முன்கூட்டி முடிவு செய்து ஒன்றாக உலகில் கழிக்கும் இரவு அல்லது மாலைப் பொழுது என்பது பொருள். 

காதலியாக டிடி:

தொகுப்பாளினி டிடி விவாகரத்துக்குப் பின், முதல் முறையாக இந்த ஆல்பத்தில் டோவினோ தாமஸ் என்பவருடன் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார். பலர் டிடி இப்படி நடித்துள்ளாரா? என ஆச்சர்யர்யப்பட்டு நிற்கின்றனர். 

பாடல் வரிகள்:
 
"ஹே காதலி நீ என்னோடு தான் உலவிரவு"... என்று ஆரம்பமாகும் வரிகள் மனதை வருடுவது போல் உள்ளது. மேலும் இந்த காதல் பாடலை அனைத்து காதலர்களுக்கும் சமர்பிக்கும் விதத்தில் இன்று வெளியிட்டுள்ளனர் குழுவினர்.

 

 YouTube ‎@YouTube

Gauthamvasudevmenon@menongautham

Our 2nd song from ondraga originals. A genre I’m supposedly most comfortable with & with this song, an old world charm that I completely subscribe to.
*ing the supremely talented Dd and a special guest.
a sneak preview of Ulaviravu ! Please take a look. https://youtu.be/eFfduTxO3FI 

8:48 PM - Feb 11, 2018