முடிந்தது கமல்ஹாசனின் திரைப்பயணம் ரசிகர்கள் அதிர்ச்சி

கமல் ஹாசன் படங்கள் என்றாலே அதில் ஏதாவது று புதிய விஷயத்தை புகுத்துவார். அப்படி பல விஷயங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமை கமல்ஹாசனுக்கு உண்டு,

இப்போது, சினிமாவை தாண்டி நேரடி அரசியலில் ஈடுபாடு காட்டிவருகிறார். இந்நிலையில், இனிமேல் நான் திரைபடங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிவந்தார். ஆனால், அவரால் நடிக்காமல் இருக்க முடியாது. நிச்சயம் நடிப்பார் என்று கூறிவந்தனர் கோலிவுட் வட்டாரத்தினர்.

இந்நிலையில், ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நடிகர் கமல்ஹாசன் இனி படத்தில் நடிக்கும் எண்ணமே கிடையாது. நடித்து வரும் இரண்டு படங்கள் தான் என்னுடையை கடைசிபடமாக இருக்கும் என கூறியுள்ளார்.

இதன் மூலம், நடிகர் கமல்ஹாசனின் திரைப்பயணம் முடிவுக்கு வருகின்றது. இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.