ஈஷா யோகாவின் பக்தையானார் நடிகை தமன்னா

ஈஷா யோகாவின் பக்தையானார் நடிகை தமன்னா..!

நேற்று மகா சிவராத்திரி என்பதால், அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

அதில் குறிப்பாக கோவையில் உள்ள வெள்ளிங்கிரி மலை அடிவாரதில்  அமைக்கப்பட்டிருக்கும் ஈஷா யோக மையத்தில், நடிகை தமன்னா சத்குருவுடன் இணைந்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

நேற்றைய  தினத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். இது குறித்து தெரிவித்துள்ள நடிகை தமன்னா" இந்த சிவராத்திரியை அவரால் மறக்க  முடியாது என்றும்,நேற்றைய தினம் ஒரு மேஜிக்கல் அனுபவம் போல் இருந்தது,இங்குள்ள ஊழியர்கள் அனைவரும் சிறப்பாக வழிநடத்தி  சென்றனர். அவர்கள் யாரும் வாய் திறந்து பேசுவதும் கிடையாது..மொத்தத்தில் அமைதியே  உருவான இடமாக  இருந்தது,அங்கிருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து  வழிபட்டேன் என தெரிவித்து உள்ளார்

மேலும் சத்குருவுக்கு  எத்தனை நன்றிகள் கூறினாலும் போதாது என நடிகை தமன்னா அவருடைய  அனுபவத்தை பகிர்ந்து  உள்ளார்