லவ் யூ இதையே எப்படியெல்லாம் சொல்லியிருக்கிறது தமிழ் சினிமா #ValentinesDay

சென்னை : ஒவ்வொரு காதலர் தினத்திலும் தங்களின் மற்றொரு பாதியாக்கிக்கொள்ள காதல் மொழி பேசுகிறார்கள் பலர். காதலர்கள் பேசுவதாலேயே எந்த மொழியும் தேனாகிறது.

ஒவ்வொருவரும் தனித்துவமான மொழிப் பிரயத்தனங்களின் மூலம் காதல் பகிர்கிறார்கள். காதலித்தலில் காதல் சொல்லல் முக்கியப் பங்காற்றுகிறது என்றே கூறவேண்டும். ஏனெனில் வாழ்நாள் முழுமைக்குமான நினைவாக இருக்கக்கூடியதல்லவா அது.

இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் வந்த சிறந்த, மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்ட சில காதல் காட்சிகளின் வசனங்களை இங்கே பார்ப்போம். இதில் விடுபட்டுப்போன உங்களுக்கு விருப்பமான வசனங்களை கமென்ட்டில் பதிவிடலாம்.

நான் உன்ன விரும்பல, உன் மேல ஆசைப்படல, நீ அழகா இருக்கேனு நினைக்கல, ஆனா இதெல்லாம் நடந்திடுமோனு பயமா இருக்கு, யோசிச்சு சொல்லு..!

அசிங்கமாயிருந்தா... விட்டுருவியா

எவனாச்சும் உசுர விடுவானா?

என்கிட்ட எதை வேணும்னாலும் கேளு கொடுக்கிறேன் என் உயிரைத் தவிர, ஏன்னா நான் உன்கூட வாழனும்

பிடிக்கலையா ? பிடிச்சிருக்கு. அதுக்கு ஏன் அழற? தெரியல

இப்ப என்ன வேணும்? நீ தான் வேணும், கல்யாணம் பண்ணிக்கிறியா?

இந்த உலகத்துல எத்தனையோ பேரு இருக்கும் போது, நா உன்ன மட்டும் ஏன் லவ் பண்ணேன் ஜெஸ்சி?

ரெண்டு நிமிசத்துலேயே சொல்லியிருப்பேன்.

ஹாய் மாலினி, ஐ ஆம் கிருஷ்ணன். நான் இத சொல்லியே ஆகணும், நீ அவ்வளவு அழகு. And I Think i am in love with you.

தினமும் நான் சண்ட போடுவேன், வெறுப்பேன், கோபப்படுவேன், தலைய பிச்சிக்க வெப்பேன். ஆனாலும் நான் சந்தோஷமா இருப்பேன். காரணம் இன்னைக்கு உள்ளுக்குள் இருக்கும் அழகையும் பாக்கனும்னு பக்குவம் வந்திருச்சு.

எனக்கு ப்ரொபோஸ் எல்லாம் பண்ண தெரியாது. முன்னப்பின்ன இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.

உலகத்துல இருக்குற எல்லா பொண்ணுங்களையும் தங்கச்சியா ஏத்துக்குறேன் இனிமே, உன்னைத் தவிர.