கணவர் ஷூட்டிங்கிற்கு சென்றால் கூட அழும் நடிகை அவ்வளவு பாசமாம்

மும்பை: பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் பற்றிய சுவராஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிகர் சயிப் அலி கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு வயதில் தைமூர் அலி கான் என்ற மகன் உள்ளார்.

பாலிவுட்டின் க்யூட் குழந்தையாக தைமூர் வலம் வருகிறார்.

சயிப் 
கரீனா

சயிப் அலி கான் வீட்டை விட்டு கிளம்பினாலே கரீனா கபூர் அழுவாராம். சயிப் படப்பிடிப்புக்காக கிளம்பினால் கூட அவரை பிரிந்திருக்க வேண்டுமே என்று அழுவாராம். இதை கரீனாவே தெரிவித்துள்ளார்.

 

மகன் 
தைமூர்

எனக்கு என் மகன் தைமூர் அலி கான் தான் மிகவும் பிடிக்கும். அவன் பிற குழந்தைகளை போன்று சாதாரணமாக வளர வேண்டும் என்று விரும்புகிறேன் என்கிறார் கரீனா.

 

அம்மா 
சோகம்

கரீனா படப்பிடிப்புக்காக வெளியே சென்றால் சயிப் தைமூரை பார்த்துக் கொள்கிறார். கரீனா வீட்டில் இல்லாவிட்டால் தைமூர் சோகமாக இருப்பான். அம்மாவை பார்த்ததும் சிரிப்பான் என்று சயிப் அலி கான் தெரிவித்துள்ளார்.

 

வேலை 
வீடு

கரீனா படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் வீட்டையும் அழகாக கவனித்துக் கொள்கிறார். அவர் தைமூரை தூக்கி வைத்திருக்கும் அழகே தனி தான் என்கிறார் சயிப் அலி கான்.