பேட்டி கொடுத்து தானாக வந்து வசமாக மாட்டிக்கிட்ட சூர்யா ஹீரோயின்

சென்னை: தனது வருங்கால கணவர் ஆறடி உயரம் இருக்க வேண்டும் என்று ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோயினாக உள்ளவர் ரகுல் ப்ரீத் சிங். தீரன் அதிகாரம் ஒன்று படம் ஹிட்டானதால் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வர திட்டமிட்டுள்ளார்.

பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ரகுல் ப்ரீத் சிங் ஹைதராபாத்தில் வீடு எடுத்து தங்கி உள்ளார். இந்நிலையில் அவருக்கும், நடிகர் ராணாவுக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

நானும், ராணாவும் நல்ல நண்பர்கள். எங்களுக்கு இடையே காதல் எல்லாம் இல்லை. நண்பர்கள் என்பதால் அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்வோம் என்று விளக்கம் அளித்தார் ரகுல் ப்ரீத் சிங்.

தனது வருங்கால கணவர் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். என் வருங்கால கணவர் கட்டாயமாக ஆறடி உயரம் இருக்க வேண்டும். ஒரு இன்ச் குறைந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்கின் பேட்டியை பார்த்தவர்கள் அவர் ராணாவை பற்றி தான் பேசுகிறார் என்கிறார்கள். ராணாவின் உயரம் 6.2 என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். ரகுல் மீண்டும் கார்த்தியுடன் ஜோடி சேர்கிறார். தமிழ் படங்களில் அவர் அதிக கவனம் செலுத்த விரும்புகிறாராம்.