பிரியா வாரியருக்கு எதிராக புகார் அதிரடியில் இறங்கிய காவல்துறையினர்

வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே வரும் தனது புருவ அசைவுகளை வைத்து உலகையே கட்டிப்போட்டுள்ள மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்கு எதிராக ஐதராபாத்தில் இஸ்லாமிய அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். 

ஒரு அடர் லவ் எனும் படத்தில் வரும் மணிக்ய மலரய பூவி என்ற பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் இஸ்லாமிய உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக இஸ்லாமிய அமைப்பினர் இந்தப் புகாரை அளித்துள்ளனர்.

நேற்று முந்தைய தினம் வெளியான ஒரு அடர் லவ் படத்தின் டீசர் காட்சிகளானது மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியரை சமூகவலைத்தளங்களில் புயலாக மாற்றியது. 

ஒரு நாள் இரவிலேயே சமூக வலைதளங்களில் நடிகை பிரியா வாரியரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை லட்சங்களை எட்டியது.

இந்த நிலையில் நடிகை பிரியா வாரியருக்கு எதிராக இஸ்லாமிய இளைஞர்கள் ஐதராபாத்தின் பலுக்நுமா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

அவர்கள் அளித்த அந்த மனுவில் ஒரு அடர் லவ் படத்தில் வரும் மணிக்யா மலரய பூவி பாடலின் வரிகளில் புனித நபராம் மக்காவின் ராணியாக வாழ்வாள் என்ற வரி இடம்பெற்றுள்ளது. 

இத்தகைய வரிகள் இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் இந்தப் பாடலில் நடித்த நடிகை பிரியா வாரியர் மற்றும் இப்பாடலை எழுதி, இசையமைத்து, பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இளைஞர்கள் அளித்த மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் தற்போது இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.