இவர் யார் என்று தெரிகிறதா சூர்யா-ஜோதிகா பொண்ணா இது

கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் சூர்யா, நடிகைகள் பூமிகா மற்றும் ஜோதிகா ஆகியோர் நடித்து வெளிவந்த படம் சில்லுன்னு ஒரு காதல். 

இந்தப் படத்தில் சூர்யா-ஜோதிகாற்கு ஐஸ்வர்யா என்ற குழந்தை இருக்கும் அந்த குழந்தை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

அப்படத்தில் படு சுட்டியாக பேசி கலக்கிய அந்த குழந்தையின் பெயர் ஸ்ரீயா சர்மா. இவர் கடந்த 1997-ம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் பிறந்தவர். 

தன்னுடைய மூன்று வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீயா.

இவர் கடந்த 2016-ம் ஆண்டு தெலுங்கில் நிர்மலா கான்வெண்ட் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

ஆனால் அதற்கு முன்னரே இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீயா இந்தியில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். ஆனால் தற்போது இவர் படங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் சட்டம் படித்து வருகிறார்.