அந்த நாளில் என்ன நடந்தது தெரியுமா அமலாபால் வெளியிட்ட அறிக்கை

தமிழ், மலையாள மொழி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம்வரும் நடிகை அமலாபால், கடந்த ஜனவரி 31ம் தேதி கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் விதத்தில் பேசியதாக, சென்னை தியாகராய நகர் துணை ஆணையர் அரவிந்திடம் அமலாபால் புகார் அளித்தார்.

இதனையடுத்து தொழிலதிபர் அழகேசன் என்பவரை கைது செய்த போலீசார், மேலும் பாஸ்கர் என்பவரையும் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், வினோத் என்பவருக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதி போலீசார் தேடி வருகின்றனர். மேலும், இதில் அமலாபாலின் மேனேஜருக்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை அமலாபால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு சில மீடியாக்கள் அந்த நாளில் என்ன நடந்தது என்பதையும், யார் குற்றவாளி என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளாமலேயே, என்னை பற்றியும், என் மேலாளர் பிரதீப் குமார் பற்றியும் தவறான செய்தியை பரப்புகிறார்கள். விசாரணை நடந்து வருகிறது, அதற்கு தடையாக நான் இருக்க கூடாது என்பதாலேயே, நான் அமைதி காத்து வருகிறேன்.

ஆனால் அந்த மாதிரி கீழ்த்தரமாக செய்தி வெளியிடும் மீடியாக்கள், மீது அவதூறு வழக்கு தொடரவும் தயங்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.