மீண்டும் இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுக்க வரும் ஜிமிக்கி கம்மல் ஷெரில் எப்படி தெரியுமா

‘ஜிமிக்கி கம்மல்’ என்ற ஒரே பாடலின் மூலம் உலகமெங்கு இருக்கும் இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட  ‘ஜிமிக்கி கம்மல்’ பேரழகி ஷெரில் நடிப்பில் வெளியாகவிருக்கும் இசை ஆல்பத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெருத்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘வெளிபாடிண்டே புஸ்தகம்’ படத்தில் வந்த ஜிமிக்க கம்மல் பாடல் மிகவும் பிரபலமானது. படத்தை விளம்பரப்படுத்த ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடும் சவாலை விட்டது படக்குழு. அதை ஏற்று பலரும் டான்ஸ் ஆடி வீடியோவை வெளியிட்டனர்.  ஜிமிக்கி கம்மல் சவாலை ஏற்று பலரும் டான்ஸ் ஆடியபோதிலும் கேரளாவின் கோழிக்கூடு பகுதியிலுள்ள Indian School of Commerce நிறுவனத்தின் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நடனமாடி யூடியூபில் வீடியோ ஒன்றை பதிவு செய்தார்கள். ஷெரில் ஆடியது தான் பெரும்பாலானோரை கவர்ந்தது. அதிலும் குறிப்பாக தமிழக இளைஞர்களை கவர்ந்தது. அந்தப் பாடல் மொழியைத் தாண்டி உலகில் உள்ள அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. அதிலும் குறிப்பாக அந்தப் பாடலின் முன் வரிசையில் ஆடிய ஷெரில் மிகுந்த கவனம்பெற்றார்.

ஜிமிக்கி கம்மல் பாடல் மிகவும் பிரபலமானதையடுத்து அந்த பாடல் சவாலை ஏற்று ஆடியவர்களை வரவழைத்து அவர்களுடன் சேர்ந்து ஆடி மோகன்லால்.  ரசிகர்கள் அவரது போட்டோவை டிவிட்டர், ஃ பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதள பக்கங்களில் புரொஃபைல் பிக்சராக வைத்தும் ஷெரில் ஆர்மி என்று ஆரம்பித்தும் அவரைப் புகழ்பெறச் செய்தனர். அந்தப் பாடல் தந்த வரவேற்பால் சினிமாவில் பல படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், “தானா சேர்ந்த கூட்டம்“ படத்தின் சொடக்கு பாடலின் லிரிக்கல் வீடியோவில் மட்டும் ஒரு காட்சியில் சொடக்கு போட்டுவிட்டு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் அவர் இசை ஆல்பம் ஒன்றில் நடித்திருக்கிறார். There is no goodbye என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்த இசை ஆல்பத்துக்கு மலையாளத்தில் பல படங்களுக்கும், சென்னையில் ஒரு நாள் படத்துக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்த மெஜ்ஜோ ஜோசப் இசையமைத்திருக்கிறார். ஷ்யாம் குமார் இயக்கியிருக்கும் இந்த ஆல்பத்தை ஒய்ட்வே புரொடக்ஷன் தயாரித்திருக்கிறது.

 

 

இந்த இசை ஆல்பத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதன்  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜிமிக்கி கம்மல் பாடலுக்குப் பிறகு ஷெரில் நடிப்பில் வெளியாகவிருக்கும் இந்த இசை ஆல்பத்துக்கான ரசிகர்கள் கூட்டம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.