விஷாலின் அண்ணி இவ்வளவு பெரிய பிரபலமா விஷால் கூடவே நடித்துள்ளார்மீண்டும் என்ட்ரி

திமிரு படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பலர் அறிந்த நாயகியானார் ஷிரியா ரெட்டி..

சென்னை எத்திராஜ் காலேஜில் படித்த இவருக்கு, படிக்க படிக்கவே மாடலிங் துறையில் வாய்ப்பு வந்தது..

தனது கம்பீரமான குரல் வளத்தால் எஸ் எஸ் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக சிறிது காலம் பணி புரிந்தார்..

தமிழ் சினிமாவிற்கு முதன்முதலில் சாமுராய் படத்தில் அறிமுகமானார், திமிரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையானார்  இந்த ஷிரியா ரெட்டி, இவரது தந்தை கிரிக்கெட் வீரர் பரத் ரெட்டி..

தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் கலக்கியுள்ளார்..சங்கர் தயாரிப்பில் வெளியான காஞ்சிவரம் என்ற படத்தில் இவரது சிறப்பான நடிப்பிற்காக பிலிம் பேர் விருதுக்கு பரிந்துரை செய்யபட்டார்..

அதன் பிறகு விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டார்..திருமணத்திற்கு பின் நடிப்பை கைவிட்டார்..

தற்போது அண்டாவ காணோம் படத்தில் வில்லியாக நடிக்க உள்ளார்..