டிஆர்பிக்காக இப்படியெல்லாமா பண்ணுவார்கள் பிரபல தொலைக்காட்சியின் மீது கொந்தளித்த ரசிகர்கள்

எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும் சரி அதில் போட்டி இருக்கத் தான் செய்யும். அந்த போட்டியானது ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகின்றனர்.

ஆனால் தற்போதைய சூழலிலோ தொலைக்காட்சிகளுக்குள் நடக்கும் போட்டியை பார்க்கும் போது ரசிகர்களுக்கு கடும் கோபம் ஏற்படுகிறது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகமாக இருந்தது.

ஆனால் அந்நிகழ்ச்சியை கலாய்த்து மற்றொரு பிரபல தொலைக்காட்சி செய்த கலாட்டா நம் அனைவருக்குமே நன்றாகவே தெரியும்.

அது போலவே தற்போது மீண்டும் அப்படிபட்ட ஒரு விஷயம் நடந்துள்ளது.  ஒரு பாடல் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களின் ஆசை பாடகியாக மாறியவர் ரமணி அம்மா.

திறமைகள் எல்லோரிடமும் தான் இருக்கிறது, ஆனால் அதனை கண்டறிந்து வெளிக்காட்டி பலர் சாதித்துள்ளனர். அந்த வகையில் தன்னுடைய வயதை பொருட்படுத்தாமல் பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரையும் கொண்டாட வைத்து வருபவர் ராக்ஸ்டார் ரமணி அம்மா.

தற்போது இவரை கலாய்த்து ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் கடுமையாக சாடியுள்ளார்.