கைகோர்த்தபடி உள்ள இந்த தமிழன் யார் தெரியுமா அக்ஷய்குமாரே ஆச்சரியப்பட்ட தமிழன்

அருணாச்சலம் முருகானந்தம் என்பவர் கோவையை சேர்ந்தவர்

சிற்றூர்களில் மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற, தூய்மைக்குறைவான செயல்முறைகளைக் களைய மலிவான தீர்வைக் காண வேண்டியதன் தேவையை வெளிப்படுத்தியவர்.

வணிகமுறையில் தயாரிக்கப்படும் நாப்கின்களை  விட மூன்றில் ஒரு பங்கு விலையில் தயாரிக்கக்கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமை பெற்றவர்.

குடும்­பத்­தி­னரும் ஊராரும் இவரை ஒதுக்­கி­வைத்த நிலையில் கல்­லூரி மாண­வி­களின் ஒத்­து­ழைப்­போடு தனது குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் முறையை நடைமுறை படுத்தியவர்..

.ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நிறுவியுள்ளார், வணிக நோக்கின்றி சேவை மனப்பான்மையுடன் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்ததற்காக இந்திய அரசு இவருக்கு பத்மஶ்ரீ் விருது வழங்கியுள்ளது.

அவரைப் பற்­றிய செய்­திகள் சர்­வ­தேச ஊட­கங்­களில் வெளி­யா­கி­யுள்­ளன. ஆனால் தமிழ்நாட்டில்..? 

தற்போது இவரது வாழ்க்கை 'பேட்மேன்' எனும் படமாக வெளிவர உள்ளது..நம் தமிழ்நாட்டில் பலருக்கு இவர் யாரென்றே தெரியாது, இப்படி இருக்க இவரது வாழ்க்கை பற்றிய வரலாறு பாலிவுட்டில் படமாக வெளிவர  உள்ளது..

பாலிவுட் வரை பிரபலமான இவரது புகழ், தமிழ்நாட்டில் ஒரு சிலருக்கே தெரியும்

இந்த படத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார், அக்ஷய்குமாரின் மனைவி இந்த படத்தை தயாரிக்கிறார்..

நம் தமிழ் திரை உலகில் இருப்பவர்கள் இது போன்று சாதனை படைத்த தமிழனது வரலாற்றை படமாக எடுத்தால் இளைய தலைமுறைக்கு நல்ல உந்துதலாக இருக்கும்..