கமல் சொன்ன 3 வார்த்தை ரஜினியின் அரசியலுக்கு ஆபத்தாகிவிடுமோ

சென்னை: தனிக் கட்சி துவங்கும் வேலையில் ரஜினி ஈடுபட்டுள்ள நேரத்தில் கமல் சொன்ன 3 வார்த்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார் உலக நாயகன் கமல் ஹாஸன். அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை தமிழில் மொழிபெயர்த்து இன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் அவர் ரஜினியின் அரசியல் பற்றியும் பேசியுள்ளார்.

காவி 
ரஜினி

ரஜினியின் அரசியலில் லேசாக காவி உள்ளது(hue of saffron). அதனால் அவருடன் கூட்டணி சேர்வது கடினம். அவர் என் நண்பர் தான் என்றாலும் அரசியல் வேறு என்று கமல் அமெரிக்காவில் தெரிவித்துள்ளார்.

ஆன்மீக அரசியல் 
விமர்சனம்

ஏற்கனவே ஆன்மீக அரசியல் என்று கூறிய ரஜினியை மக்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு பின்னால் காவி தான் உள்ளது என்று விமர்சிக்கிறார்கள். இந்நிலையில் கமல் வேறு இப்படி கூறியுள்ளார்.

 

கமல் 
ஆப்பு

கமலின் பேச்சால் ரஜினியின் அரசியல் கட்சி துவங்கப்படும் முன்பே காவி பூசப்பட்டுவிட்டது. ஏற்கனவே தமிழகத்தில் காவியை கண்டால் எரிச்சல் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் கமலின் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


சரி 
இல்லை

கமல் ஹாஸனுக்கு ரஜினி மீது பொறாமை அதனால் அப்படி பேசியுள்ளார் என்கின்றனர் சிலர். சிலரோ கமல் சொன்னால் சரியாகத் தான் இருக்கும். ரஜினி காவிக்காக அரசியலுக்கு வருகிறார் என்கின்றனர்.