யூத் பட நடிகையா இவர் அடையாளமே தெரியாத அளவில் மாறிப்போன நாயகி

யூத் என்ற படம் கடந்த 2002 ம் ஆண்டு வெளியானது. இந்தத் திரைப்படமானது வின்சென்ட் செல்வாவின் இயக்கத்திலும் வின்சென்ட் செல்வா, விஜய்பாஸ்கர் ஆகியோரின் திரைக்கதையிலும் பிரபல முன்னணி நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளிவந்தது.

இப்படமானது சிரு நவ்வுட்டோ என்கிற தெலுங்குத் படத்தைத் தழுவியே வெளியானது. இதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சந்தியா என்னும் கதாபாத்திரத்தில் கதாநாயகியாக ஒரு பெண் நடித்திருப்பார்.

அவரின் உண்மையான பெயர் சாஹீன் கான். இவர் மும்பையில் பிறந்த வளர்ந்தாலும் கூட தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் தான். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் சரளமாக பேசுக்கூடியவர்.

இவரது பள்ளி பருவ காலத்திலேயே இவர் நடிப்பிலும் மற்றும் மாடலிங் துறையிலும் மிகுந்த ஆர்வம் உள்ளவர் . இவர் முதன் முதலில் பேர் அண்ட் லவ்லி என்னும் முக பூச்சு விளம்பரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். 

இந்த விளம்பரத்தின் மூலம் அனைவரது பார்வையுமே இவர்பக்கம் திரும்பியது அதன் பின்னர் பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.

இவர் முதன் முதலாக தெலுங்கு மொழி படத்தில் தான் நடித்தார் அந்த படம் நல்ல வரவேற்பை தந்தால் அதனையடுத்து இவர் தமிழில் ஈர நிலா என்ற படத்தில் நடித்தார். 

இருப்பினும் ஒரு சில காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை. அதன் பிறகு தான் கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யின் படத்தில் நடித்தார் இந்த படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இதனால் மீண்டும் பல படங்களில் நல்ல வாய்ப்பு கிடைத்தது ஆனால் தனக்கு உரிய கதாபாத்திரம் கிடைக்காததால் அவர் அந்த படங்களில் நடிக்கவில்லை. அதன் பின்னர் திடீரென இவர் மும்பையை சேர்ந்த தக்வீம் ஹாசன் கான் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இவர்கள் இருவருக்கும் ஆலம்கான் என்ற ஒரு குழந்தை உள்ளது. தற்போது இவர் எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று மும்பையில் வாழ்ந்து வருகிறார்.