சூர்யா பக்கத்துல கூட வரமுடியாது விஜய்... ட்விட்டரில் புதிய மைல்கல் தொட்ட அன்பான ஹீரோ

சென்னை : தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் பிரபலமாகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவரது ஒவ்வொரு படங்களும் தமிழ்நாட்டைப்போன்று கேரளா, ஆந்திராவிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகி வருகின்றன.

சரவணன் என்கிற சூர்யா திரையுலகில் காலடி எடுத்து வைத்து 20 வருடங்கள் ஆகிறது. அவரின் முதல் படமான 'நேருக்கு நேர்' 1997-ல் வெளியானது. 'நந்தா', 'பிதாமகன்', 'பேரழகன்', 'கஜினி', 'மாற்றான்' உள்ளிட்ட திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தான் ஒரு வெர்சட்டைல் நடிகர் என நிரூபித்திருக்கிறார் சூர்யா.

அதனால் தற்போதைய நிலவரப்படி தென்னிந்தியாவில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார் சூர்யா. சோசியல் மீடியாக்களில் சூர்யா நடித்த படங்களின் ஃபர்ஸ்ட் லுக், டீசர்கள் வெளியாகும்போது அதை அவரது ரசிகர்கள் பெரிய அளவில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

சூர்யா குடும்பத்தினர் 'அகரம்' எனும் பெயரில் ஒரு பொதுநலன் கருதிய, லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக இத்தொண்டு நிறுவனம் பங்காற்றி வருகிறது.

 

சமூகப் பணிகளிலும் ஆர்வம் கொண்ட சூர்யாவை ட்விட்டரில் ஏராளமான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள். அந்த வகையில், சூர்யாவை ட்விட்டரில் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 4 மில்லியன் ஆகியுள்ளது. விஜய்க்கு ட்விட்டரில் 1.42 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள்.

சூர்யாவுக்கு 4 மில்லியன் பின்தொடர்பாளர்கள் எட்டியதையொட்டி #4MAnbaanaFansForSuriya எனும் ஹேஸ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். சூர்யாவுக்கு ஸ்பெஷல் காமன் டி.பி ஒன்றையும் டிசைன் செய்துள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.