மீண்டும் ஹீரோவாக களம் இறங்கும் சேரன்பட தலைப்பு இயக்குனர் விவரம்

இயக்குனர் சேரன், நடிகர் சேரன் என இரண்டு பரிணாமங்களை கொண்டவர். இயக்குனராக கதை, கருத்து அம்சம் உள்ள படங்களை வழங்கியவர். நடிகராக தன் யதார்த்த நடிப்பால் நம்மை கவர்ந்தவர்.

cheran

கடைசியாக சேரன் இயக்கத்தில் 2015-ல் வெளியான படம் ‘ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை’. இந்த படத்தை தொடர்ந்து சிறிய இடைவெளிக்கு பிறகு சேரன் மீண்டும் சினிமாவில் நுழைகிறார். இம்முறை நடிகராக.

cheran

ஜெயம் ரவி , ஸ்ரேயா நடிப்பில் உருவான “மழை” (2005) படத்தை இயக்கிய ராஜ்குமார் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சேரன்.

இப்படத்திற்கு “ராஜாவுக்கு செக்” என பெயர் வைத்துள்ளனர். மேலும் இப்படம் துப்பறியும் திரில்லர் படமாக ரெடியாகிறது. அது மட்டும் அல்லது இப்படத்தில் அப்பா – மகள் சென்டிமென்டும் உள்ளதாம். இன்று சென்னையில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.