என்ன தவம் செய்தேன் ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேன் அதிதி அருவி பாலன்

சென்னை: என்ன தவம் செய்தேன் என்று தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் அதிதி பாலன்.

அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன் நடித்த அருவி படம் ஹிட்டாகியுள்ளது. இந்த படத்திற்காக அருண் பிரபு மற்றும் அதிதிக்கு பாராட்டுகள் வந்து குவிகின்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினியும் அருவியை பார்த்து பாராட்டியுள்ளார்.

பாலா 
பாராட்டு

அருவி படத்தை பார்த்த இயக்குனர் பாலா அதிதி பாலன், இயக்குனர் அருண் பிரபுவை நேரில் சந்தித்து மனதார பாராட்டியுள்ளார். பாலாவே பாராட்டிய மகிழ்ச்சியை அதிதி ட்விட்டர் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.


எளிது அல்ல 
வாழ்க

அதிதியின் ட்வீட்டை பார்த்த ரசிகர் ஒருவர் பாலா சாரிடம் பாராட்டு பெறுவது ஒன்றும் எளிதான விஷயம் அல்ல. அவரிடமே பாராட்டு பெற்ற நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.


அருவி 
வாழ்த்து

அருவி என்ற ஒரேயொரு படம் மூலம் தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார் அதிதி. அதை தான் இந்த ரசிகர் இப்படி ட்வீட்டியுள்ளார்.


அண்ணா 
படம்

இவர் இல்லாம நான் இந்தப் படம் கண்டிப்பா பண்ணியிருக்க முடியாது. ஒரு அண்ணணா எல்லாமே சொல்லிக்கொடுத்து பாத்துக்கிட்டாரு. இந்த மாதிரி ஒரு நல்ல உள்ளத்த சந்திக்கிறது என்னோட பாக்கியம். அண்ணா நீங்க கண்டிப்பா எனக்கு ஒரு படம் எழுதி பண்ணனும். உங்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறேன். மிக்க நன்றி அண்ணா என்று ட்வீட்டியுள்ளார் அதிதி.

2.ஓ ரன்னிங் டைம் பற்றி அதிர்ச்சி தகவல் இதுக்குதான் ஹாலிவுட் படம்னு சொன்னீங்களா