சிம்பு சொன்ன அந்த ஒற்றை வார்த்தை நிகழ்ச்சியில் ரசிகர்களின் முன்பு கொந்தளித்த ஓவியா

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக "அழகிய ஓவியா" எனும் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா கலந்து கொள்ளும் நிகழ்ச்சி பொங்கல் தினமன்று ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவின் ரசிகர்கள் பலர் கலந்துகொண்டு ஓவியாவிடம் பல்வேறு கேள்விகள் கேட்கவுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓவியாவிடம், அந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பிரியங்கா காதல் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டகிறார்.

அதற்கு குழந்தை போல் சிரித்துக்கொண்டே பதிலளித்த நடிகை ஓவியா, காதல் என்பது மிகவும் அழகான விஷயம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், தனது மனது சிம்பு சிம்பு என்று சொல்வதாகக் கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். ஏற்கனவே கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் முழுவதும் ஓவியாவிற்கும் சிம்புவிற்கும் ரகசிய திருமணம் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியது. 

அதோடு இவர்கள் இருவரும் மாலையும் கழுத்துமாக இருப்பது போன்றும் சில புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதனைத் தெளிவு படுத்தும் விதமாக, ஓவியாவின் முன்னிலையிலேயே சிம்புவிற்கு போன் போட்டு பேசப்பட்டது. அப்போது சிம்புவும் காமெடியாக... ஆமாம் நேற்று முன் தினம் நிச்சயதார்த்தம் நடந்தது, நேற்று திருமணம் செய்துகொண்டோம் என்று கூறியுள்ளார்.

உடனே என்ன ஆனது என்று தெரியவில்லை.... சிரித்துக்கொண்டிருந்த ஓவியா திடீரென கோவமாக, எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை அப்படியே போட்டுடுங்க என்று கூறியுள்ளா

சசிகலாவை வம்புக்கு இழுத்து தினகரனின் கோபத்திற்கு ஆளாகும் சூர்யா என்ன சொன்னார் தெரியுமா