உங்களுக்கு இதயம் இருந்தால் விக்னேஷ் சிவன் கோபம்

தமிழ் சினிமாவிற்கு கடந்த சில வருடங்களாகவே போதாத காலம் ஆக இருக்கிறது. அதிலும் கடந்த வருடம் தமிழ் சினிமா பல சிரமங்களையும், பிரச்சனைகளையும் சந்தித்தது. தியேட்டர் டிக்கெட் கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரி மற்றும் தமிழ்நாடு அரசின் கேளிக்கை வரி ஆகியவை விதிக்கப்பட்டது. தியேட்டர் டிக்கெட் கட்டணங்களும் உயர்த்தப்பட்டன. இதனால், ரசிகர்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 120 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிய இடத்தில் தற்போது 50 ரூபாய் அதிகமாக 170 ரூபாய் வரை கொடுத்து படம் பார்க்க வேண்டியுள்ளது. இதனால், தியேட்டர்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.தியேட்டர் கட்டணப் பிரச்சனையோடு கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவை பாதித்து வரும் பைரசி இணையதள விவகாரம் இன்னமும் தொடர்ந்து வருகிறது. விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றார்கள். ஆனால், ஒரு வருடத்திற்கு மேலாகியும் அவர்களால் பைரசி இணையதளங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.பொங்கலை முன்னிட்டு நேற்று வெளியான 'தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி' ஆகிய படங்கள் பைரசி இணையதளங்களில் நேற்றே வெளியாகிவிட்டன. அதையடுத்து 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன், பைரசி இணையதளங்களில் ஒன்றான தமிழ்ராக்கர்ஸுக்கு கோபத்துடன் ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார்.“தமிழ் ராக்கர்ஸ் டீம், ப்ளீஸ், உங்களுக்கு இதயம் இருந்தால், இதைப் பயன்படுத்துங்கள். இதற்காகத்தான் கடுமையாக உழைத்திருக்கிறோம்.

பல வரி பிரச்சனைகள், திரையுலகப் பிரச்சனைகள், ஆகியவற்றைக் கடந்துதான் படங்கள் வெளியாகியுள்ளன. எனவே, “தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி” ஆகிய படங்களுக்கு இதைச் செய்யாதீர்கள்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவரான கலைப்புலி தாணு, வெளியிடும் படம் 'ஸ்கெட்ச்'. முன்னாள் செயலாளரான கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. முக்கியத் தயாரிப்பாளரான இவர்கள்து படங்களுக்கே இந்த நிலைமை என்றால், மற்ற படங்கள் என்ன ஆவது என திரையுலகத்தில் முணுமுணுப்பு எழுந்துள்ளது.

இந்த பைரசி விவகாரத்தை யார்தான் முடிவுக்குக் கொண்டு வரப் போகிறார்கள் ? என பல சிறிய தயாரிப்பாளர்கள் பரிதாபமாகக் கேட்கிறார்கள்.

ரசிகர்களால் தல பொங்கலான தமிழர் திருநாள் அசர வைக்கும் புகைப்படம் உள்ளே