நயன்தாராவின் புது கண்டிஷன் இது எப்போதிலிருந்து புருவம் உயர்த்தும் திரையுலகம்

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இன்றும் டாப் நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா.

இந்நிலையில், படத்தில் நடிக்குமாறு தேடிவரும் இயக்குனர்களிடம் முன்பு போல கிளாமராக நடிக்கக் மாட்டேன் என்றும், சிறிய ஆடைகளை அணிந்துகொண்டு நடிக்க மாட்டேன் என்று கறார் கண்டிஷன் போடுகிறாராம் நயன்.

தற்போது, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜெய் சிம்ஹா” படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் கவர்ச்சியான காட்சிகள், ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகள் என நடிக்காமல் இழுத்துப்பொத்திக்கொண்டு நடித்துள்ளார்.

முதலில், இந்த படத்தில் நடிக்க மறுத்துள்ளார் நயன்தாரா. பிறகு, கே.எஸ்.ரவிக்குமார் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். நயன்தாராவின் இந்த திடீர் கண்டிஷன்களை பார்த்து, இது எப்போதிலிருந்து…! என புருவம் உயர்த்துகிறது திரையுலகம்.

பிட்காயினுக்கு போட்டியாக அம்பானியின் அதிரடி திட்டம்