நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா

தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகள் தான் அதிக பேர் முன்னணி நடிகைகளாக வளம் வருகிறார்கள். அந்த வகையில் பார்த்தால், இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனுடன் கதாநாயகியாக நடித்து முன்னணி கதாநாயகிகள் இடத்தை பிடித்தார். அதைத்தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார்.

இவரை என்ன தான் நெட்டிசன்கள் கலாய்த்தாலும் இவருக்கும் ரசிகர்கள் உண்டு. இவரின் தானா சேர்ந்த கூட்டம் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், இவர் சாமி 2 மற்றும் சண்டக்கோழி 2 படத்தில் நடித்து வருகிறார். இவர் நேற்று லிங்குசாமி வெளியிட்ட கவிதை புத்தக விழாவில் கலந்துகொண்டார்.

அந்த விழாவில் எனக்கும் சுமாராக கவிதை எழுத வரும் என்று கூறிய கீர்த்தி, அவர் எழுதிய கவிதையை வாசிக்க, ‘அட சூப்பரா இருக்கே’ என்று பலரும் பாராட்டினார்கள்.கீர்த்தி ஏற்கனவே நன்றாக படம் வரைவார் என்று எல்லோருக்கும் தெரியும், தற்போது தமிழில் கவிதையும் எழுதுவது பலருக்கும் ஆசிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகிய நடிகை நதியா கொடூரமான காரணம்.