பாபா முத்திரையுடன் ரஜினி பொங்கல் வாழ்த்து

தன்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தை 1ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர். பொங்கல் வைத்து, கரும்பு வெட்டி, புத்தாடை உடுத்தி தமிழர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவற்றுடன் ஜல்லிக்கட்டு போட்டியும் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

இந்நிலையில் ட்விட்டரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ள ரஜினி, "என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார். அந்த வாழ்த்துப்பதிவின் இறுதியில் பாபா முத்திரை இடம்பெற்றுள்ளது. 

ஐபில் 2018 ஏலத்தில் அதிக பேஸ் பிரைஸ் கொண்ட வீரர்களின் பட்டியில் இது தான்