இவர் யாரென்று தெரிகிறதா பலரும் அறியாத இவரது திரைக்கு பின் வாழ்க்கை வெளிநாட்டுகாரனே வியந்த

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிப் பார்க்க வரும் வெளி நாட்டவர்கள் பெரும்பாலும் சைக்கிள் ரிக்சாவில் தான் வருவார்கள்.

அப்போது தான், எல்லாப் பகுதிகளையும், நிதானமாகச் சுற்றிப் பார்க்க முடியும். ரிக்சாக்காரர்கள் எல்லோரும், பெரும்பாலும் படிக்காதவர்கள் தான். ஆனால்,  அவர்களின் பேச்சுத் திறமை, புலமை பெற்ற டூரிஸ்ட் கைடுகளுக்கு கூட வராது.

“யூ நோ, திஸ் டெம்பிள் பை வரகுண பாண்டியா. தீஸ் ஃபோர் டவர்ஸ் ஆர் நாட் சேம். டிஃபரண்ட் சைஸ், ஃபோர் கேட்ஸ். பட் மெயின் என்ட்ரான்ஸ் - ஈஸ்ட்” என்று சைக்கிள் ரிக்சாவை மிதித்துக் கொண்டே, வண்டியில் உட்கார்ந்திருக்கும் வெளி நாட்டுப் பயணிகளிடம் கூச்சமில்லாமல் பேசுவார்கள்.

அதை அவர்களும் புரிந்து கொண்டு, தலையை ஆட்டி ஆமோதிப்பார்கள். வண்டியை விட்டு இறங்கும் போது, அவர் சொன்ன தகவல்களுக்காக ரிக்சாக்காரரே எதிர்பார்க்காத பணத்தைத் தருவார்கள்.
    
இந்த பட்லர் இங்கிலீசைப் பற்றி அவர்களிடம் கேட்டால்,

நான் பேசுற இங்கிலீசு வெள்ளக்காரனுக்குப் புரியுது. அவன் பேசறது எனக்கும் புரியுது.

நான் சுத்தமான இங்கிலீசு பேசனும்னா, கான்வெட்டிலே போய்த் தான் படிச்சுட்டு வரணும். ஒண்ணும் தெரியலேன்னா, ஊமை மாதிரி சைகை செய்ஞ்சாக் கூட அவங்கலேசில புரிஞ்சுக்குவாங்க. நாங்க படிக்காதவங்க. 
    
ஆனா, எங்க வண்டியிலே ஏறி வர்றவங்க பேசுறதைக் கேட்டு பல பாசைகள் பேசுவோம். ஹிந்தி, பிரெஞ்சு, தெலுங்கு, மராத்தி, பெங்காளி-ன்னு எல்லா மொழியும் பேசுவோம்” என்றார்கள்.

இன்று நன்கு படித்துப் பட்டம் பெற்ற பல பட்டதாரிகள், ஆங்கில மொழி தங்களுக்குப் பேசத் தெரியாது என்று, அவர்களாகவே ஒரு தாழ்வு மனப்பான்மையை தங்களுக்குள் வளர்த்துக் கொண்டு, இண்டர்வியூவில், அதிகாரிகள் கேட்கும் ஆங்கிலக் கேள்விகளுக்கு, பதில் சொல்லத் தெரியாமல் வியர்த்துப் போகிறார்கள்.

அவர்கள் ஆங்கில வழிக் கல்வியில் தான் கல்வி பயின்று பட்டம் பெற்றிருக்கிறார்கள். இருந்தாலும், தன் மேல் உள்ள நம்பிக்கையின்மையும், நன்றாக ஆங்கிலம் பேசுபவர் முன்னால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையும், தான் அவர்களைச் செயல் இழக்கச் செய்கிறது. இதற்குப் பயிற்சி தேவையில்லை. முயற்சி தான் முக்கியம்.

நீங்கள் தவறாகவே ஆங்கிலத்தில் உரையாடினாலும், யாரும் கிண்டல் செய்வார்களோ என்று கவலைப் படாதீர்கள்.

நீங்கள் சொல்லும், ஆம், இல்லை என்று சொல்லும் ஓரிரு ஆங்கில வார்த்தைகளிலேயே தொடங்கி, அப்படியே எளிதாக பிக்கப் பண்ணி விடலாம். ஆங்கிலம் ஒரு மொழியே தவிர அது தான் அறிவு என்றில்லை. 


    
தமிழ்த் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தவர் எம்.ஆர். ராதா.சொந்தமாக  நாடக கம்பெனியை நடத்தி, அதிலே பெரும் புகழையும் பேரையும் அடைந்தார்.

சினிமாவிலும் தனக்கென முத்திரையைப் பதித்து கோடீஸ்வரர் ஆனார். அது அவரின் நடிப்பாற்றலுக்கும், தனக்கென அமைத்துக் கொண்ட பாணி, மற்றும் அவர் திறமை மீது அவர் கொண்ட நம்பிக்கை தான் காரணம்.


    
ஏனென்றால், ஆங்கில வசனங்களைக் கூட அநாசியமாகப் பேசிய எம். ஆர். ராதாவிற்கு, எழுதப் படிக்கத் தெரியாது.

வசனங்களை, அவரது உதவியாளர் வாசித்துக் காட்டுவார். அதை அவரது ஸ்டைலில் அழகாகப் பேசி விடுவார். எழுதப் படிக்காத தெரியாமல் இருந்தும், கலையின் மீதும், தன் மீதும் கொண்ட நம்பிக்கையினால் தான், ஒரு நாடக கம்பெனியையே அவரால் நடத்த முடிந்தது.
    
அவர் வசனம் எழுதி, இயக்கி பல நூறு மேடைகளில், பல ஆயிரம் முறை நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற கதை தான் ரத்தக் கண்ணீர். படத்தின் வசனத்தை அவர் சொல்லச் சொல்ல அவரது உதவியாளர் எழுதினார்.

அந்தப் படத்தில், அவர் லண்டனில் படித்த மேதையாக வருவார். படத்தில் அவர் பேசும் ஆங்கில வார்த்தைகள் அவ்வளவு திருத்தமாக இருக்கும். என்ன காரணம்? அவர் தன் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை.


    
உங்கள் மீது நம்பிக்”;கை” வைத்து, வாழ்க்”கை”யைத் துவங்குங்கள்.உண்மையாய் உழையுங்கள். அது தானாகவே உங்களை உயர்த்தும்.

விவாகரத்துக்கான காரணம் என்ன மனம் திறந்த டிடி