லட்சுமி குறும்பட டீமின் அடுத்த படம் போஸ்டரை வெளியிட்ட கௌதம் மேனன்

சென்னை : மணிரத்னத்தின் உதவி இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் வெளியான 'லட்சுமி' குறும்படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்தக் குறும்படம் கௌதம் மேனனின் 'ஒன்றாக என்டர்டெயின்மென்ட்' யூ-ட்யூப் சேனலில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்தக் குழுவின் அடுத்த குறும்படம் 'மா' படத்தின் போஸ்டரை கௌதம் மேனன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

லட்சுமி பிரியா 
லட்சுமி குறும்படம்

பெண்களின் வெளி, பாலியல் சுதந்திரம் ஆகியவை பற்றிப் பேசுவதாக எடுக்கப்பட்ட 'லட்சுமி' குறும்படம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால், அதிகமான பார்வைகளையும் பெற்றது. சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் மீதான விமர்சனங்களால் அதிகமாக வைரலானது.

பெரும் விவாதம் 
செம வைரல்

லட்சுமி குறும்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. யூ-டியூபில் 50 லட்சத்தைக் கடந்து எல்லோரையும் கவனிக்க வைத்தது. மேலும், சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் இக்குறும்படம் குறித்து வர, பெரும் வாக்குவாதமே நடந்து முடிந்தது.

 

மா குறும்படம் 
லட்சுமி டீம்

'லட்சுமி' குறும்படத்தில் லக்ஷ்மி ப்ரியா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் 'லட்சுமி' குறும்பட இயக்குனர் அடுத்து 'மா' என்ற குறும்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விவாதம் கிளப்புமா 
கௌதம் மேனன் தயாரிப்பு

'மா' குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கௌதம் மேனன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'லட்சுமி' படத்தைப் போல இந்தக் குறும்படமும் சர்ச்சைகளையும், விவாதங்களையும் கிளப்புமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஆபாச பட நடிகையுடன் அஜால் குஜால் உறவு வைக்க பல லட்சம் கொடுத்த டிரம்ப் அம்பலமானது அட்டூழியம்