திருமணம் ஆகிடுச்சு பலர் மத்தியில் பேசிய சிம்பு கோவத்தில் கத்திய ஓவியா

பிரபல தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக ஓவியா கலந்துகொள்ளும் 'அழகிய ஓவியா' என்கிற நிகழ்ச்சி பொங்கல் தினமன்று ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஓவியாவின் ரசிகர்கள் பலர் கலந்துகொண்டு ஓவியாவிடம் கேள்விகள் பல கேட்க உள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓவியாவிடம், தொகுப்பாளர் பிரியங்கா காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு  குழந்தை போல் சிரித்துக்கொண்டே காதல்... என்பது மிகவும் அழகான விஷயம் என கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தன்னுடைய மனது சிம்பு சிம்பு என சொல்வதாகக் கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். ஏற்கனவே கடந்த சில நாட்களாக... சமூக வலைத்தளங்களில் ஓவியாவிற்கும் சிம்புவிற்கும் ரகசிய திருமணம் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாயின . இவர்கள் இருவரும் மாலையும் கழுத்துமாக  இருப்பது போலவும் சில புகைப்படங்கள் போட்டோ ஷாப் செய்யப்பட்டு  வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதனைத் தெளிவு படுத்தும் விதமாக, ஓவியா முன்னிலையிலேயே சிம்புவிற்கு போன் போட்டு பேசப்பட்டது. இதில் சிம்பு காமெடியாக... ஆமாம் நேற்று முன் தினம் நிச்சயதார்த்தம்  நடந்தது, நேற்று திருமணம் செய்துகொண்டோம் எனக் கூறியுள்ளார். 

உடனே என்ன ஆனது என தெரியவில்லை சிரித்துக்கொண்டிருந்த ஓவியா கோவமாக, எனக்கொண்ணும் பிரச்சனை இல்லை அப்படியே போட்டுடுங்க எனக் கூறியுள்ளார். 

ரஜினிக்கு பிறகு விஜய் தான் புள்ளி விபரத்தை வெளியிட்ட சர்வே