ரஜினிக்கு பிறகு விஜய் தான் புள்ளி விபரத்தை வெளியிட்ட சர்வே

எம்.ஜி.ஆர் - சிவாஜி ஆட்சி செய்த  தமிழ் சினிமாவில் அவர்களுக்கு பிறகு ரஜினி - கமல் ஆட்சி செய்தாலும், இதில் ரஜினிக்கு தான் மவுசு அதிகம். அதேபோல் தற்போது விஜய் - அஜித் என்று இருவர் கோடம்பாக்கத்தின் உச்ச நடிகர்களாக இருந்தாலும், இவர்களில் யாருக்கு ரஜினியை போல் அதிக மவுசு, என்ற விவாதம் நெடு நாட்களாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில், பிரபல பத்திரிகை ஒன்று ரஜிக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார்? என்ற தலைப்பில் மெகா சரவே ஒன்றை நடத்தியது. இதில், அஜித்தை பின்னுக்கு தள்ளி விஜய் வெற்றி பெற்றுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ், ரசிகர்கள் கருத்து, வெளிநாட்டு வசூல் உள்ளிட்ட பல புள்ளி விபரங்களை வைத்து ரஜினிக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் விஜய் தான், என்று அந்த பத்திரிகை கூறியுள்ளது.

55 எம்.எல்.ஏக்கள் ரெடி பீதியை கிளப்பிய தினகரன் பிரித்து மேய்ந்த சசிகலா