போக்கிரி குண்டு பையன் இப்போ என்ன ஆனார் தெரியுமா வெளியான தகவல்

தமிழ் சினிமாவில் பல குழந்தை நட்சத்திரங்களாக வலம் வந்து ஒரு கலக்கு கலக்கி பின் பெரிய பிரபலமாகின்றனர். அந்த பட்டியலில் கடந்த 2002ஆம் ஆண்டு நடிகர் கமல் நடிப்பில் வெளிவந்த பஞ்சதந்திரம் படத்தில் குழந்தை நடசத்திரமாக பிரபலமானவர் தான் பரத்.

தமிழ்நாட்டில் பிறந்த இந்தச் சிறுவன் தெலுங்கு மற்றும் தமிழில் ஒரு காமெடி நடிகராக நடித்தார். சென்னையில் உள்ள வேளாங்கண்ணி இண்டர்நேஷனல் பள்ளியில் படித்த போதே இவர் பல கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்வாராம். 

இதைப் பார்த்த ஏவிஎம் குரூப் தான் நைனா என்ற படத்தில் இவரை அறிமுகபடுத்தினர். அதனையடுத்து பஞ்சதந்திரம், போக்கிரி, வின்னர் மற்றும் உத்தம புத்திரன் போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் வெளியான ரெட்டி என்ற பட வெற்றிக்கு பின்னர் இவரை பள்ளியில் அனைவரும் சிட்டிநாயுடு என்றுதான் அழைப்பார்களாம். அதோடு இவர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுகள் சில வாங்கியுள்ளார்.

தற்போது இவர் பெரியதாக வளர்ந்தோடு மட்டுமல்லாமல் ஸ்லிம்மாகவும் ஆகிவிட்டார். இவர் கடைசியாக இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் அனுஷ்காவிற்கு தம்பியாக நடித்தார். 

இந்நிலையில் தற்போது இவர் படிப்பில் கவனம் செலுத்திவருகிறாராம். மேலும் கூடிய விரைவில் மீண்டும் சினிமா உலகிற்கு வருவேன் என்று கூறியுள்ளார்.

கலகலப்பு 2 பிரஸ் மீட்டில் ஜெய் பற்றி மனம் திறந்த சுந்தர் சி