கலகலப்பு 2 பிரஸ் மீட்டில் ஜெய் பற்றி மனம் திறந்த சுந்தர் சி

சுந்தர்.சி இயக்கியுள்ள ‘கலகலப்பு 2’ படத்தில், ஜெய், ஜீவா, மிர்ச்சி சிவா, நிக்கி கல்ரானி, கேத்ரின் தெரேசா, நந்திதா, வி டி வி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர்,சதீஷ், வையாபுரி,சந்தான பாரதி ஆகியோர் நடித்துள்ளனர்.

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இந்தப் படத்துக்கு இசையமைக்க, சுந்தர்.சி.யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படம், தியேட்டர்கள் கிடைக்காததால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜெய் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் 31 அன்று வெளிவந்த படம் பலூன். அப்படத்தின் தயாரிப்பாளர் ஜெய் மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். ஜெய் ஷூட்டிங் சரியாக வரவில்லை. அப்படியே வந்தாலும் போதையில் தான் வருவார். எப்பொழுதும் குடிப்பதில் தான் ஆர்வமாக இருந்தார். இயக்குனர் சிரிஷ் தற்கொலைக்கு முயன்றார். அவரால் எனக்ளுக்கு நஷ்டம் என்று கழுவி ஊற்றினார்.

என்னடா இது சிம்பு பாணியில் ஜெய் என்று நம்மை யோசிக்க வைத்தார்.

இந்நிலையில் ‘கலகலப்பு 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஜெய் இந்தப் படத்தில் நடித்திருப்பதால், இதில் ஜெய்யுடன் ஏதாவது பிரச்னை ஏற்பட்டதா? என இயக்குநர் சுந்தர்.சி.யிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

“எனக்கும், ஜெய்க்கும் இடையில் எந்தப் பிரச்னையும் இல்லை. 7 மணிக்கு ஷூட்டிங் என்றால், 6.45 மணிக்கே மேக்கப்புடன் ரெடியாக வந்து நிற்பார் ஜெய்.அவர் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். ஜெய்க்கும், ஜீவாவுக்கும் இடையில் ஏகப்பட்ட காம்பினேஷன் ஸீன்கள் இருந்தன. அதில் கூட எந்தப் பிரச்னையும் இல்லை” என சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

அடேங்கப்பா கணக்கில் வராத வருவாயே 4,500 கோடியா சசிகலா குடும்ப மெகா ரெய்டில் சிக்கியது