தல வீட்டு கதவை தட்டிய பி.வி.சிந்து ராஜ மரியாதை கொடுத்த அஜித்

நடிகர் அஜித்துக்கு தீவிர ரசிகர்கள் பலர் உள்ளனர்.  அந்த வரிசையில் அஜீத்தின் தீவிர ரசிகையாம் பி.வி. சிந்து. இவர்  ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்த விளையாட்டு வீராங்கனை. 

பி.வி.சிந்து, சமீபத்தில் நடிகர் அஜித் வீட்டுக்குச் சென்று சந்தித்துள்ளார். பொதுவாகவே அனைவர்க்கும் மரியாதை கொடுக்கும் அஜித் பி.வி.சிந்துவிற்கு ராஜ மரியாதை கொடுத்ததாகவும், சிந்துவின் உடல் நலம் மற்றும் விளையாட்டு குறித்து கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த சந்திப்பின் போது அஜித் குடும்பத்துடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார் சிந்து. அஜித் மகள் அநோஷ்காவுடன் சிந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்த சந்திப்பு குறித்து ட்விட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார்களுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என்று கூறி, சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.  

Image may contain: 10 people, people smiling

ஒல்லி ஹீரோயினுக்கு வீடு வாங்கி கொடுத்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இயக்குனர்