பத்து ரூபாய் தருவாரா கருணாநிதி மூலை முடுக்குகளிலிருந்து எல்லாம் படையெடுக்கும் தொண்டர்கள்

தமிழர் திருநாளையொட்டி திமுக தலைவர் கருணாநிதி நாளை தொண்டர்களை சந்திக்க உள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவது வழக்கம்.

அந்தநாளில் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து பெறுவதற்காக அவரை சந்திப்பது வழக்கம். கோபாலபுரம் வீட்டில் குவியும் நிர்வாகிகளுக்கு தன் கையால் புத்தம் புது பத்து ரூபாய் நோட்டை கொடுப்பார். இதைப் பெறுவதற்காகவே நிர்வாகிகள் மத்தியில் போட்டி நிலவும்.

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் தொண்டர்களை சந்திக்கவில்லை.

உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, 'அவரைப் பார்ப்பதற்கு யாரும் வர வேண்டாம்' என அப்போது அறிவுறுத்தியது தலைமைக் கழகம். அவர் இல்லாத பொங்கலை நினைத்துப் பார்க்க முடியவில்லை" என்று புலம்பினர் அறிவாலய நிர்வாகிகள்.

இந்நிலையில் இந்த வருடம் தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக  நாளை சந்திக்கிறார்.

காலை 11 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களைச் சந்திக்கும் அவர், அவர்களுக்கு புதிய 50 ரூபாய் நோட்டு வழங்க உள்ளார்.

இதனால் அவரது கோபாலபுரம் வீடு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி கருணாநிதிக்கு பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க, தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

15 மாதங்களுக்கு பின்பு தொண்டர்களை கருணாநிதி சந்திக்க இருப்பதால் ஏராளமானோர் சந்திக்க வருவார்கள் என்று தெரிகிறது.

அதுக்காக இந்த மாதிரி பத்த வச்சிடாதிங்க கெஞ்சும் எமிஜாக்சன்