யார் இந்த வேலையை பாக்குறாங்கன்னு தெரியல புலம்பும் கயல் ஆனந்தி

தமிழில் இவர் நடித்த முதல் படம் பொறியாளன். ஆனால், இரண்டாவதாக நடித்த “கயல்” என்ற திரைப்படம் முன்னரே ரிலீஸ் ஆனது. படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனால், இன்றுவரை கயல் ஆனந்தி என்றே அழைக்கப்படுகிறார் அம்மணி.

இந்நிலையில், சமீபத்தில் வார இதழ் ஒன்றிற்கு இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், அடிக்கடி ஏதாவது ஒரு கிசுகிசு சமாசாரத்தில் சிக்கிக்கொள்கிறீர்களே..? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கயல் ஆனந்தி, “பொதுவாக என்னை பற்றி வரும் கிசுகிசு செய்திகளை நான் படிப்பது கிடையாது, எனக்கு நெருக்கமானவர்கள் படித்துவிட்டு கூறுவார்கள்.

அதை கேட்டால் பயங்கரமான சிரிப்பு வரும். யார் இந்த வேலையை பாக்குறாங்கன்னு தெரியல..!. நான் யார் கூடவும் நெருங்கி பழகுறது கிடையாது. ஆனாலும், என்னை பற்றி அப்படி எழுதுறாங்க. யார் அப்படி செய்றாங்கன்னு உங்களுக்கு தெரிஞ்சா கண்டுபிடிச்சு சொல்லுங்கண்ணே..! என்று வெள்ளந்தியாக சிரித்துள்ளார் கயல் ஆனந்தி.

அஜித் சொன்னதை தவறாக கொண்டு வந்துட்டாங்க முன்னணி நடிகர் ஓபன் டாக்