விவாகரத்திற்கு காரணமே இவர் தானாம் பிரபல தொகுப்பாளினி டிடி ஓபன் டாக்

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியினைக் காண அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த அளவிற்கு அவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். 

கடந்த சில மாதங்களாகவே எதிர்பாராமல் அவரது திருமண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு தற்போது விவாகரத்து வரை சென்றுள்ளார். இந்தப் பிரச்சினையால் அவர் தற்போது அதிகமாக நிகழ்ச்சியினை தொகுத்து வழங்காமல் இருந்து வந்தார். 

அதோடுமட்டுமல்லமால் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். தற்போது அந்த வகையில் இந்த வாரம் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ஸ்பெஷலாக நடிகர் சூர்யாவை டிடி பேட்டி எடுக்கவுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு டிடியை திரையில் காண்பதால் அவருடைய ரசிகர்கள் ஒருபக்கமும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் மறுபக்கமும் பேரார்வத்தில் ஆர்வத்தில் உள்ளனர்.

என்னதான் டிடி கடந்த சில நாட்களாகவே சர்ச்சையில் சிக்கி இருந்தாலும் கூட, அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்றாலே அது ஒரு தனி சிறப்பு மிக்கவையாக இருப்பதால் என்றும் ரசிகர் பட்டாளத்திற்கு குறைவே கிடையாது என்றுதான் கூற வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிடி முதல் முறையாக தனது விவாகரத்து குறித்து வாயை திறந்துள்ளார். அதில் கூறுகையில், தனது விவாகரத்திற்கு கணவன் மட்டும் காரணம் இல்லை என்றும், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதால் தான் பிரிய நினைத்தோம் என்றும் கூறியுள்ளார்.

கவுதமியின் முதல் கணவர் யார் தெரியுமா இப்போது என்ன செய்கிறார்