ஜூலியுடன் செல்ஃபி எடுக்கவே நிகழ்ச்சிக்கு வந்த நபர் ( புகைப்படம் உள்ளே)

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எடுத்த நல்ல பெயரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கெடுத்துக் கொண்டார் ஜூலி. ஜூலின்னா போலி என்று அனைவரும் சொல்லும்படி நடந்து கொண்டார். தற்போது அவர் கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் பார்வையாளராக வந்த டிசிஎஸ் ஊழியரான சத்யா ஜூலியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினார்.

சத்யா ஜூலியுடன் செல்ஃபி எடுக்க விரும்புவதை அறிந்த கலா மாஸ்டர் அவரிடம் ஜூலி எதுக்கு உங்களுக்கு பிடிக்கும், நிறைய பேர் அவரை திட்டுகிறார்களே என்று கேட்டார்.அதற்கு சத்யாவோ, நான் அவரின் ரசிகன். எனக்கு அவரை பிடிக்கும் என்று பதில் அளித்தார்.

இவ்வளவு பெரிய ஸ்டேஜில் வந்து நான் ஜூலியோட ரசிகன் என்று சொல்வதற்கு தனி கட்ஸ் வேண்டும். அதனால் நன்றி சத்யா என்றார் ஜூலி.

பாகுபலியில் நடித்த இந்த பெண் யார் என்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவிங்க.!