லட்சுமி ராமகிருஷ்ணன் மீது புகார்களை அடுக்கிய கணவர் ராம்..?

1500வது எபிசோடை அசாத்தியமாக எட்டியுள்ளது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி. ஆரம்பத்தில் இருந்தே ஒரு தரப்பினர் இந்த நிகழ்ச்சியை எதிர்த்து வந்தாலும், மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்தது தான். 

இந்த நிகழ்ச்சியின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது இயக்குனர்தான் என்றாலும், அனைத்தை புகழையும் பெற்றுக்கொள்வதென்னவோ லட்சுமி ராமகிருஷ்ணன்தான்..! தொகுப்பாளராக மட்டுமே இருக்கும்  இவருக்குப் பின்னால் இந்த நிகழ்சிக்காக தூக்கம் தொலைத்து, சாப்பிடக் கூட நேரம் இல்லாமல் உழைக்கும் இயக்குனர் எட்வர்ட் மற்றும் நிருபர்கள் பலர்  மறைக்கப்பட்டவர்களாகவே இருந்துகொண்டிருக்கின்றனர்.

 

 

இந்த நிகழ்ச்சிக்குப் போட்டியாக, நடிகை குஷ்பு, நித்தியானந்தா உள்ளிட்ட  பலர் இதே பாணியில் வேறு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் நடத்தியும் அத்தனையும் தோல்வியில் தான் முடிந்தன... ஏன்.. இத்தனை நாட்களாக இந்த நிகழ்ச்சியும்கூட பலரால் கவனிக்கப் படாமல் தான் இருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோ, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... 

ஏன் தெரியுமா? இத்தனை நாள் அனைவரையும் சரமாரியாகக் கேள்விகளால் துளைத்தெடுத்து, வெட்கித் தலைகுனிய வைத்த லட்சுமி ராமகிருஷ்ணன் மீதே ஒரு புகார் வந்துள்ளதாம்..!

 

 

இதுகுறித்த ஒரு ப்ரோமோ இன்று வெளியானது. இதில் இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் எட்வர்ட், லட்சுமி ராமகிருஷ்ணனிடம் சென்று உங்கள் மீது புகார் வந்துள்ளது என்று கூறியதும், ஸ்டூடியோ அரங்கில் இருந்து மிகவும் கோபமாக வெளியேறி விடுகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன் .. என்பது போல் இருக்கும் அந்த ப்ரோமோ.

இந்த ப்ரோமோ இன்று சமூக தளங்களில் வைரலாகப் பரவியது. அப்படி என்னதான் பிரச்னை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு! அவர் மீது என்ன புகார் இருக்க முடியும் என்று நாமும் விசாரித்தோம். இந்தத் தொடரில் இருக்கும் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது அவர்கள் கூறியது அதிர்ச்சியிலும் அதிர்ச்சியாக இருந்தது. லட்சுமி ராமகிருஷ்ணன் மீது அடுக்கடுக்கான புகார்களை மேலும் மேலும் அடுக்கியவர் வேறு யாரும் இல்லை ... இவருடைய கணவர் ராம் தானம்.

 

 

பல்வேறு புகார்களை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது சுமத்தியுள்ள இவரது கணவர் ராம்...தன் மனைவி தன்னை மது அருந்த பாருக்கு வற்புறுத்தி அழைத்ததாகக்  கூறினாராம்! இத்தனை நாள் நடுவராக இருந்து அடுத்தவருக்கு அட்வைஸ் கொடுத்து வந்த லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக குற்றவாளிக் கூண்டில் நிற்கப்போகிறாரோ..!?

இப்படி எதிர்பாராத ஒரு இக்கட்டான நிலையைச் சந்தித்திருக்கும் இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் எட்வர்ட், இதை எப்படி சமாளிக்கப் போகிறார்..? குற்றவாளியாக நிற்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் மீது எழுந்துள்ள புகாருக்கு தீர்ப்பு வழங்க யாரை அழைக்கப் போகிறார்..? இது போன்ற கேள்விகளுக்கு பதில் எப்படி கிடைக்கப் போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனராம்!

விஷால் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கும்போது பார்த்திபனுக்கு இப்படி ஒரு ஆசையா?