சம்மதம் சொன்ன தளபதி – முடிவானார் தளபதி62 ஹீரோயின்..! – யார் தெரியுமா..?

கத்தி, துப்பாக்கி என இரண்டு மிகப்பெரிய வெற்றிப்படங்களுக்கு பிறகு நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கைகோர்த்துள்ள திரைப்படம் தளபதி62. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது.

இசையமைப்பாளர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கும் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில், இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஜூலி நடிக்கவுள்ளார் என்ற அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்துகொண்டிருகின்றன.

ஆனால், இந்த படத்தின் காதநாயகி முடிவாகிவிட்டார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் ஸ்பைடர் படத்தில் நடித்த ரகுல் பரீத் சிங் தளபதி62வில் ஹீரோயினாகியுள்ளார். ஸ்பைடர் தோல்வியால் ரகுல் பரீத் சிங்கை கதாநாயகியாக ஒப்புக்கொள்ளளாமா…? என்று முதலில் யோசித்த தளபதி. தற்போது அவர் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் வெற்றியடைந்ததால் சரி என சம்மதம் சொல்லி இருக்கிறாராம்.

எனவே, தளபதி62-வில் ரகுல் பரீத் சிங் நடிப்பது உறுதியாகியுள்ளது.

பாகுபலி 2 பாலிசியை பின்பற்றும் 2.0 படக்குழு – அடேங்கப்பா…, மொரட்டு ப்ளானா இருக்கே..!