பாகுபலி 2 பாலிசியை பின்பற்றும் 2.0 படக்குழு – அடேங்கப்பா…, மொரட்டு ப்ளானா இருக்கே..!

பாகுபலி 2 – இந்திய சினிமாவை ஒரு குலுக்கு குலுக்கிய திரைப்படம். படம் வெளியாகி கிட்டத்தட்ட 2000 கோடிகளை வசூலித்து கோரதாண்டவம் ஆடியது. படத்தில் நடித்த அத்தனை நடிகருக்கும் புதிய படங்களின் வாய்ப்பு வரிசைகட்டி நிற்கின்றது.

இந்நிலையில், பாகுபலி போன்றே பிரமாண்டமான பொருட்செலவில் முழுக்க முழுக்க அதிநவீன கிராபிக்ஸ் மற்றும் விஷுவல் ஏஃபெக்ட்ஸ்களை உட்புகுத்தி 400 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் 2.0. இந்த படத்தின் ரிலீஸ் தேதி கடந்த ஒரு வருடமாக தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

இந்த படமும் பாகுபலி போன்று பிரமாண்டமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தினை நேரடி ஹிந்திப்படமாகவும் தயாரித்துள்ளது படக்குழு. பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் அக்ஷய்குமார் தான் படத்தின் வில்லன். ஹீரோவை விட வில்லனுக்கு தான் படத்தின் முதற்பாதியில் முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது என கூறுகிறார்கள்.

மேலும், பாகுபலி 2 சென்ற வருடம் ஏப்ரல் 28-ம் தேதி ரிலீசானது. அதே போல இந்த வருடம் ஏப்ரல்27 அல்லது 28-ம் தேதியில் 2.0 படத்தை ரிலீஸ் செய்துவிடவேண்டும் என்ற ப்ளானில் காய்களை நகர்ந்திக்கொண்டிருக்கிறது 2.0 படக்குழு. கோடை விடுமுறையில் குடும்பங்கள், குழந்தைகளின் கூட்டம் வந்தாலே படத்தின் வசூல் தாறுமாறாக எகிறும் என்பது படக்குழுவின் நம்பிக்கை.

உன் ஓட்டை வாயை கொஞ்ச நாளைக்கு மூடிக்கொண்டு இரு ” – பிரபல நடிகருக்கு இயக்குனர் எச்சரிக்கை