“கதைக்குத் தேவைப்பட்டால் அப்படி கூட நடிக்கலாம் என்பதுதான் எனது பாலிசி” – பிரபல நடிகை பரபரப்பு பேட்டி

படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் நான் ஆடைகளை கலைந்து நிர்வாணமாகக் கூட நடிக்க தயார் என்று நடிகை பத்மப்ரியா கூறியுள்ளார். தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு மலையாள படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வந்தார் பிரபல நடிகை பத்மப்ரியா.

மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பத்மப்ரியா. “நயிகா” என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். அந்த காலத்து “அழகுப்பதுமை” நடிகை சாரதாவின் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்கள் இந்தப் படம். ஜெயராஜ் இயக்கத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், என்னைப் பொறுத்தவரை நல்ல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளதாக கருதுகிறேன். அதேசமயம், கிளாமராக நடிப்பதிலும் ஆட்சேபனை இல்லை. அப்படி வாய்ப்பு வரவில்லை. இதனால் தான் பெரிய அளவில் நடிக்கவில்லை. ஆனால், அது அவ்வளவு கஷ்டமான விஷயமும் இல்லை. கதைக்குத் தேவைப்பட்டால் நிர்வாணமாகக் கூட நடிக்கலாம் என்பதுதான் எனது பாலிசி. பெண்களை கவர்ச்சியை விட்டுத் தனித்துப் பார்க்க முடியாது. அதேசமயம், அவர்களை கவர்ச்சியாக மட்டுமே சித்தரிப்பது என்பதை என்னால் ஏற்க முடியாது, என்று கூறியுள்ளார்.

அம்மணி நடிப்பை சில காலத்திற்கு ஒத்திப் போட்டிருக்கிறாராம். விரைவில் அமெரிக்காவுக்குப் பறக்கப் போகும் அவர், அங்கு மேற்படிப்பு படிக்கப் போகிறார்.

அது உண்மைதான் – ஆனால், இது உண்மையில்லை – சர்ச்சைக்கு முற்றுப்புள்ள வைத்த அமலாபால்