அது உண்மைதான் – ஆனால், இது உண்மையில்லை – சர்ச்சைக்கு முற்றுப்புள்ள வைத்த அமலாபால்

நடிகை அமலாபாலிற்கு விவாகரத்திற்கு பிறகும் பல பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திருட்டுபயலே படத்தின் இரண்டாம் பாகத்தில் கவர்ச்சியை வாரி வழங்கிஇருந்தார் அம்மணி.

இந்நிலையில், நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவாகவுள்ள “காயம்குளம் கொச்சுண்ணி” என்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட திரைப்படத்தில் இருந்து அமலாபால் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

நடிகை அமலாபால் இது குறித்து கூறுகையில், காயம்குளம் கொச்சுண்ணி படத்தில் இருந்து நான் வெளியேறிய தகவல் உண்மைதான். ஆனால், என்னுடைய சுய விருப்பத்தின் பேரிலேயே நான் படத்தில் இருந்து விலகினேன். என்னை யாரும் படத்தில் இருந்து நீக்கவில்லை. சில தனிப்பட்ட காரணங்களால் என்னால் இந்த படத்தில் நடிக்கமுடியவில்லை. மற்றபடி படக்குழுவிற்கும் எனக்கும் பிரச்சனை என்று வந்த தகவல்கள் உண்மையில்லை. என தன்னை பற்றிய சர்ச்சைக்கு பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அமலா பால்.

அமலாபால் விலகிய கதாபாத்திரத்தில் நடிகை ப்ரியா ஆனந்த் தற்போது நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

மெரீனா கடற்கரை 2 மி.மீ. அளவுக்கு விரிவடைந்து கொண்டே வருகிறது.. பேரிடர் மேலாண்மை நிபுணர் விடுத்த பகீர் தகவல்..?