அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் பிரச்சனை தான், ஆனால்- விஷால் பேச்சு வீடியோ

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க பொறுப்பை ஏற்றதும் நடிகர் விஷால் மிகவும் பிஸியாகவே இருக்கிறார். தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் நிறைய பிரச்சனைகள் இருப்பதால் அதன் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்.

அண்மையில் இவர் காத்திருப்போர் பட்டியல் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியிருந்தார். நிறைய படங்கள், நல்ல கதையாக இருந்தாலும் சரியான வரவேற்பை பெறுவதில்லை. இப்போது ஒரு முக்கியமான விஷயம் இன்னும் 2, 3 மாதத்தில் முடிய இருக்கிறது. அது நடந்ததும் நல்ல படங்கள் மக்களிடம் வரவேற்பு பெறும், லாபம் அடையும்.

நிறைய படங்கள் ரிலீஸ் ஆவதற்கு பிரச்சனையை சந்தித்தாலும் இறுதியில் வெற்றியை சந்தித்துள்ளது. துள்ளுவதோ இளமை, வாலி முக்கியமாக வரலாறு போன்ற படங்கள் எல்லாம் நிறைய பிரச்சனைகளுக்கு பிறகு தான் வெளியாகி ஹிட்டடித்தது. அதனால் பிரச்சனைகள் இருந்தால் அதை பற்றி பயப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார்.