மெர்சலுடன் போட்டிக்கு ரெடி – கடைசி நேரத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

விஜய்க்கு போட்டியாக வெளிவரும் படங்கள் ஹிட்டாகுமா? ஆகாதா? என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மெர்சல் வரும் தீபாவளி தினத்தன்று திரைக்கு வரவுள்ளது. இதனை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், மெர்சல் தீபாவளிக்கு வருவதை அடுத்து மற்ற படங்கள் விலகி கொண்டன. இதையடுத்து ஒரு சில படங்கள், மட்டும் தீபாவளிக்கு மெர்சலுடன் மோத உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள கொடிவீரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில். தற்போது, நடிகர் வைபவ், ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கும் மேயாத மான் திரைப்படமும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், மெர்சலுடன் மோதும் இந்த படங்கள் வெற்றி பெறுமா? வசூல் படைக்குமா என்று பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

கொளுத்தி போட்ட பன்னீரால் கொந்தளிக்கும் அதிமுக.. அந்த பதினொன்னும் போயிட்டா என்ன ஆவது..?