என்னால முடியல, தற்கொலை செய்கிறேன்: வைரலான பிக் பாஸ் போட்டியாளரின் கடிதம்

மும்பை: இந்தி பிக் பாஸ் போட்டியாளர் சப்னா சவுத்ரி தற்கொலை செய்ய முயன்றதற்கு முன்பு எழுதிய கடிதம் வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியை நடத்தும் சல்மான் கான் பிக் பாஸ் வீட்டில் இருந்த ஜுபைர் கான் கெட்ட வார்த்தை பேசியதற்காக அவரை திட்டித் தீர்த்துவிட்டார்.

அதன் பிறகு ஜுபைர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

சப்னா சவுத்ரி 
போட்டியாளர்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சாதாரண போட்டியாளர்களில் சப்னா சவுத்ரியும் ஒருவர். ஹரியானாவை சேர்ந்த நடனக் கலைஞர் அவர்.

 

தற்கொலை முயற்சி 
சல்மான் கான்

சப்னாவை அறிமுகம் செய்து வைத்தபோது சல்மான் அவருடன் சேர்ந்து நடனம் ஆடினார். அப்போது சப்னா தான் ஒரு முறை தற்கொலைக்கு முயன்றதாக சல்மானிடம் தெரிவித்தார்.

 

கடிதம் 
வைரல்

சப்னா சவுத்ரி தற்கொலைக்கு முயற்சி செய்ததற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதம் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.


வழக்கு 
தலித்

சப்னா பொது நிகழ்ச்சிகளில் ஆடி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் ஆடிய நடனம் தலித் சமூகத்தினரின் மனதை புண்படுத்துவது போன்று இருந்தது என்று கூறி அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

 

அஜித் படத்துக்கு இசையமைக்க ஐ யம் வெய்ட்டிங்! - முன்னணி இசையமைப்பாளர்