பிக்பாஸ் வீட்டில் குக்கர் வெடித்து சுஜாவின் காது ஜவ்வு கிழிந்தது…! காட்டாமல் மூடிமறைந்த விஜய் டிவி…!

விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் சனிக்கிழமை முடிவடைந்தது. நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் பிக்பாஸ் முடியும் 100 நாட்கள் வரை நிகழ்ச்சி குறித்து எந்த விதமான தகவலையும் தெரிவிக்க கூடாது என்ற விதிமுறை இருந்தது.

நிகழ்ச்சி முடிந்த உடன் போட்டியாளர்கள் அனைவருமே போட்டி போட்டு கொண்டு தற்போது பிக்பாஸ் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதன்படி பிக்பாசில் கலந்து கொண்டவர்களில் நடிகை சுஜா வாருணியும் ஒருவர். அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியால் எதிர்மறையான பிம்பம் விழுந்தது.

இதனால் அவர் விஜய் டிவி குறித்தும், பிக்பாஸ் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதுபோல ஒரு பேட்டியில் புதிய குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.

அதில், பிக்பாஸ் வீட்டிற்கு கமல் வந்த நாளில் சமையல் செய்தபோது குக்கர் வெடித்து சுடு தண்ணீர் என் மீது விழுந்தது.

அதில் எனது காது காயம் அடைந்து கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது. கமல் சார் பேசியபோது கூட எனக்கு எதுவும் சரியாக கேட்கவில்லை.

இதனை விஜய் டிவி காட்டவில்லை. இதுபோல விஷயங்கள் காட்டப்படவில்லை என்று சுஜா வருணி குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னையில் மட்டும் ரூ.10 கோடி வசூல் சாதனை படைத்த நம்ம செல்ல ‘தல’