தளபதி படத்துக்கே அவ்ளோ செலவா..? – அப்போ சூப்பர் ஸ்டார் படத்துக்கு..! – லைகா அதிரடி

’2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு 12 கோடி ரூபாயை செலவழிக்க லைகா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உட்பட பலர் நடித்துள்ள படம், ’2.0’. லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த சயின்ஸ் பிக்சன் படத்தின் மேக்கிங் டீசர், சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, துபாயில் வரும் 27-ம் தேதி நடக்கிறது. அங்குள்ள புர்ஜ் பார்க்கில் நடக்கும் இந்த விழாவை இதுவரை நடத்திராத வகையில் பிரமாண்டமாக நடத்த லைக்கா முடிவு செய்துள்ளது. இங்கு ஏ.ஆர்.ரகுமானின் லைவ் இசை நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது.

தளபதியின் மெர்சல் படத்தின் இசை வெளியீட்டிற்கு மட்டும் கிட்டதட்ட 5 கோடி செலவு செய்தது TSL நிறுவனம். இதனை தொடர்ந்து, 2.0 படத்தின் இசை வெளியீட்டிற்காக ரூ.15 கோடியை லைக்கா செலவிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதம் இதன் டீசர் ஐதராபாத்தில் வெளியிடப்படுகிறது. டிசம்பர் மாதம் சென்னையில் டிரைலர் வெளியீடு சென்னையில் நடத்தப்பட இருக்கிறது. ஜனவரி 25-ம் தேதி பிரமாண்டமாக படம் ரிலீஸ் ஆகிறது.

 

திருமணமான மூன்றாவது நாளே பிரபல நடிகை செய்த செயலால் அதிர்ச்சியில் மாமனார் வீட்டார்..!