அடுத்த கொண்டாட்டத்திற்கு தயாராகும் அஜித் ரசிகர்கள்..! தீபாவளிக்கு மகிழ்ச்சியான செய்தி…!!

அஜித் நடித்த விவேகம் படம் பல கதம்ப விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் பலே என சொல்லும் படி சாதனையை செய்துவிட்டது. ரசிகர்களும் பெரிதளவில் கொண்டாடி களைத்துவிட்டார்கள். அஜித்தும் தற்போது மருத்துவ சிகிச்சையுடன் ஓய்வுவெடுத்து வருகிறார்.

கண் திருஷ்டி போல ஒவ்வொரு படத்தின் கடைசியில் அவருக்கு இதுபோல ஏதாவது நடந்து வருகிறது. இந்நிலையில் அவரின் அடுத்த படம் யாரோடு என பேசப்பட்டு வருகிறது.

உலகளாவிய நிலையில் அவருக்கு ரசிகர்கள் கிடைத்து வருகிறார்கள். மேலும் அவர்களை குஷிப்படுத்த இன்னொரு தகவலும் வந்துள்ளது. சமீபத்தில் அவர் நடித்த என்னை அறிந்தால் படம் கன்னட மொழியில் டப் செய்யப்பட்டு வெளியானது.

தற்போது ஆரம்பம் படத்தை தீரா என்ற பெயரில் அதே போல டப் செய்து வெளியிடப்போகிறார்களாம். 2013 தீபாவளிக்கு ஆரம்பம் வெளியானது நினைவிற்கு வருகிறது.

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்