தல58 படத்தை தயாரிக்கப்போவது யார் தெரியுமா.?

அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான விவேகம் கலவையான் விமர்சனங்களை பெற்றது. அதனால் என்ன, அனைத்தையும் தாண்டி பிரமாண்ட வெற்றி பெற்றது கிங் ஆஃப் ஒப்பனிங்-ன் திரைப்படம்.

அஜித்தின் அடுத்த படத்தையும் சிறுத்தைச சிவா தான் இயக்கவுள்ளார் என்று கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை யார் தயாரிக்கவுள்ளது என்ற தகவல்கள் கசிந்துள்ளன.

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் ஜூ டிவி நிறுவனத்துடன் இணைந்து தமிழ்ப்படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் அவர்களின் முதல் அடியே பெரிய ஹீரோவுடன் தான் இருக்கவேண்டும் என்று நினைகிறார்களாம். இதனால், எப்படியாவது அஜித்திடம் சம்மதம் வாங்கிவிட வேண்டும் என பணிகளை துரிதமாக்கியுள்ளார்களாம் போனி கபூர் அண்ட் கோ.

அனேகமாக, அஜித்தின் தல58 படத்தை இவர்கள் தான் தயாரிப்பார்கள் என கூறுகிறார்கள் சினிமா வட்டாரத்தினர்.

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்