மொட்டை ராஜேந்திரனுக்கு இப்படி ஒரு நோயா?? இந்த மொட்டை ராஜேந்திரன் இவ்வளவு பெரிய ஆளா.. (அரிய புகைப்படம

காமெடியியிலும்,வில்லன் வேடத்திலும் தமிழ்த்திரையுலகை கலக்கி வருபவர் ராஜேந்திரன் என்கின்ற மொட்டை ராஜேந்திரன்..

எப்பொழுதுமே மொட்டை தலை, கரகரவென்ற புரியாத தனித்த குரல் இது தான் மொட்டை ராஜேந்திரனின் அடையாளம், இதை வைத்து கொண்டு தமிழக திரை உலகத்தை கலக்கி கொண்டுள்ளார்..

ஆரம்ப காலத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்தாலும், நல்ல சான்ஸ்ஸாக  பாலாவின் நான் கடவுள் படத்தில் வில்லன் பாத்திரத்தில் கலக்கி பிரபலமானார்…. தற்போது காமெடி பாத்திரங்களிலும் , குணச்சித்திரப் பாத்திரங்களிலும் அசத்தி வருகின்றார்.

ராஜேந்திரன் எப்படி மொட்டை ராஜேந்திரன் ஆனார் ??

ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்தபொழுது வில்லன் ஒரு கழிவு வாய்க்காலில் குதிப்பது போன்றதொரு சீனுக்காக  அப்படியே கழிவுநீரில் நிஜமாகவே குதித்துவிட்டாராம்.

அதன் பின்னர் அவரது உடலிலே தோல்நோய் ஏற்பட்டு அவரது உடலிலிருந்து அத்தனை முடிகளும் கொட்டத்தொடங்கி விட்டனவாம்.

குரலும் மாறிவிட்டதாம். அதன் பின்னர் எவ்வளவு ட்ரீட்மெண்ட் எடுத்தும் சரிசெய்ய முடியவில்லையாம்.

கால ஓட்டத்தில் மொட்டை ராஜேந்திரன் மாறிய குரலாலும்,உருவ தோற்றத்தினாலுமே அனைவரும் ரசிக்கும் படியாக நடித்து பிரபலமாகியும் விட்டார். தற்போது இவருக்கு பல வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்…

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்