படபிடிப்பு தளத்தில் காமெராவில் பிடிபட்ட நிஜ பேய் - பயந்து நடுங்கும் நடிகர்

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு தான் நிஜ பேய்யை நேரில் கண்ட அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் அவர்கள் பேசுவதின் மூலம் குறித்த சம்பவம் கொடைக்கானல் சூசைட் ஸ்பாட் பகுதிக்கு அருகே நடந்துள்ளது என தெரிகிறது.

பலூன் திரைப்பட படப்பிடிப்பு கொடைக்கானல் நடைபெற்று வருகிறது. இதில் நடிக்கும் காமெடி நகடிர் யோகிபாபு படப்பிடிப்பு முடிந்தவுடன் தனது குழுவுடன் காரில் சூசைட் ஸ்பாட் வழியாக ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.

அப்போது, சாலையின் குறுக்கே கருப்பு நிறத்தில் உருவம் ஒன்று அலைந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சிடைந்த யோகிபாபு காருக்குள் இருந்த படி அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு காமெடி நடிகர் சூரி இதே போன்று வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டிருந்தார் என்பது நினைவுக் கூரதக்கது. சிலர் இது படத்தை விளம்பரம் செய்யும் ஒரு யூக்தி என கருத்து தெரிவித்துள்ளனர்.

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்